ஆயுதங்களுடன் சிக்கிய போதைப்பொருள் படகுகள்: பாதுகாப்பு பிரதி அமைச்சர் நேரில் ஆய்வு
திக்கோவிட்டை துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்ட ஆயுதங்களுடன் சிக்கிய போதைப்பொருள் படகுகளை பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர நேரில் ஆய்வு செய்தார்.
இது குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், "தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதிலும், போதைப்பொருள் மற்றும் ஆயுதக் கடத்தல் வலையமைப்புகளை முடக்குவதிலும் முப்படைகளும் பொலிஸாரும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றனர்.
2025 ஆம் ஆண்டில் மாத்திரம் சுமார் 75 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கடுமையான சட்டங்கள்
2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 14 படகுகள் போதைப்பொருளுடன் சிக்கியுள்ளன எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிரான சட்டங்கள் கடுமையாக்கப்பட்டு வருவதாகவும், கடத்தல்காரர்கள் தொடர்பான தகவல்களை 1818 மற்றும் 1997 ஆகிய இலக்கங்களுக்கு வழங்குமாறும் அவர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.
பிக்பாஸ் 10 வீட்டில் இருந்து வெளியேறிய லட்சுமி ப்ரியா - இன்ஸ்டா ஸ்டோரியில் போட்ட பதிவு வைரல்! Manithan