சவாலாக மாறியுள்ள எரிபொருள் விநியோகம்.. வெளியான முக்கிய தகவல்
இலங்கையின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதாகவும், அதற்கான எரிபொருளை தொடர்ந்து வழங்குவதாகவும் லங்கா ஐஓசி தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் ஊடக சந்திப்பில் உரையாற்றிய குறித்த நிறுவனத்தின் நிர்வாக பணிப்பாளர் கே. ரகு குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர், "லங்கா ஐஓசியின் நிர்வாக பணிப்பாளர் என்ற முறையில், நாங்கள் தொடர்ந்து எரிபொருளை வழங்குவோம் என்று மக்களுக்குச் சொல்ல வேண்டும்.
தற்போதைய நிலைமை
நாங்கள் எரிபொருள் இருப்பை உறுதி செய்கிறோம், இது நாட்டிற்கு மிகவும் முக்கியமானது. தற்போதைய நிலைமை மிகவும் நன்றாக இருக்கிறது என்று நான் கூறவில்லை.

ஆனால், லங்கா ஐஓசியும் அரசாங்கமும் நாட்டில் தொடர்ந்து எரிபொருளை வழங்க தங்களால் முடிந்த அனைத்தையும் செய்கின்றன.
நாட்டின் முன்னேற்றத்திற்காக நாங்கள் தொடர்ந்து எரிபொருளை வழங்குவோம்" என்று அவர் உறுதியளித்துள்ளார்.
புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 19 மணி நேரம் முன்
புதிய கம்பெனிக்கு பார்ட்னர் ஆன நிலா, ரூ. 5 லட்சம் ரெடியானதா, ஹேப்பி எபிசோட்... அய்யனார் துணை சீரியல் Cineulagam