மத்திய கிழக்கில் உக்கிரமடையும் போர்! பாரிய நெருக்கடியில் இலங்கை
மத்திய கிழக்கில் நிலவும் போர் நிலைமை காரணமாக, சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு அழைத்து வர திட்டமிடப்பட்டிருந்த 768 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகை 30 சதவீதம் குறைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக மத்தள விமான நிலையத்தை அபிவிருத்தி செய்ய திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அபிவிருத்தி திட்டங்கள்
இந்த நிலையில் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இராணுவ நிலைமை நாட்டின் ஏற்றுமதித் துறையை பாதித்துள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்தள்ளது.

மத்திய கிழக்கு பிராந்தியம் மொத்த ஏற்றுமதியில் சுமார் 8 சதவீதம் பிரதிநிதித்துவப்படுத்துவதாக அதன் தலைவர் மங்கள விஜேசிங்க கூறியுள்ளார்.
இந்த நெருக்கடி தொடர்ந்தால், ஈரானுக்கு ஏற்றுமதி செய்யப்படும் தேயிலையில் 35 சதவீதம் வேறு நாட்டிற்கு திருப்பி விடுவது குறித்து பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக மங்கள விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 18 மணி நேரம் முன்
ஈரான் மீது திரும்பும் உலக நாடுகள் கவனம்: உக்ரைனுக்கு நல்லதல்ல: ஜெலென்ஸ்கி புதிய நகர்வு News Lankasri
இதற்காகதான் பாகிஸ்தானியரை எடுத்தோம்: அவரைப் பெற்றதில் மகிழ்ச்சி - சன்ரைசர்ஸின் வெட்டோரி News Lankasri