தோல்வியடைந்துவிட்டது அரசு! - மைத்திரி அதிரடி
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு தோல்வியடைந்துவிட்டது. அரசின் முக்கியஸ்தர்களின் உரைகள், அவர்கள் வெளியிட்டு வரும் கருத்துக்கள் இதைப் பறைசாற்றுகின்றது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று ஊடகங்களிடம் தெரிவித்தார்.
"ஜனாதிபதி ஒரு வழியிலும், பிரதமர் இன்னொரு வழியிலும், அமைச்சர்கள் வேறொரு வழியிலும் பயணித்தால் தத்தளித்துக்கொண்டிருக்கும் அரசை எப்படி நிமிர்த்துவது" என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
"அரசை வீட்டுக்கு அனுப்புவது எமது நோக்கம் அல்ல. எனினும், இக்கட்டான இந்த நிலையில் தீர்க்கமான முடிவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எடுக்க வேண்டியுள்ளது" என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
வாக்குறுதிகளை நிறைவேற்றியே தீருவோம் என்று ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள்
நிறைவடைந்த பின்னரும் அரசின் தலைமை கூறுவது ஆணை வழங்கிய மக்களைத் தொடர்ந்தும்
ஏமாற்றும் செயலாகும் என்றும் மைத்திரிபால குற்றஞ்சாட்டினார்.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 17 மணி நேரம் முன்
பண பிரச்சனையை தீர்த்த அண்ணாமலை, ஆனால் கடைசியில் மனோஜ்-ரோஹினிக்கு ஷாக்... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri