மீண்டும் பழைய பாதையில் செல்லும் அரசாங்கம் : எழுந்துள்ள குற்றச்சாட்டு
அரசாங்கம் மக்களால் வெறுக்கப்பட்ட பழைய பாதையில் செல்வதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக ஜூலை 9 அரகலய போராட்டத்தின் செயற்பாட்டாளர் ரொசான் கரவனல்ல தெரிவித்துள்ளார்.
ஜூலை 9 அரகலய போராட்டத்தின் வெற்றியின் மூன்றாவது ஆண்டு நிறைவு மற்றும் போராட்டத்தில் இறந்த மாவீரர்களை நினைவுகூரும் நிகழ்வு நேற்று(09) மாலை காலி முகத்திடலில் நடைபெற்றது.
போராட்டத்தில் நாம் எதிர்பார்த்த..
அதில் தொடர்ந்து உரையாற்றிய அவர், ஜுலை 09 நாட்டு மக்களால் மறக்க முடியாத விசேட தினமாகும். அன்று ஜுலை 05 ஆம் திகதி போராட்டத்தின் எதிர்பார்ப்பு என்ற கொள்கை பிரகடனத்தை வெளியிட்டோம்.
அதில் நாம் முக்கிய ஆறு கொள்கைகளை வெளியிட்டுள்ளளோம். அதில் முதலாவதாக கோட்டாபய வெளியோற்றப்பட்டார்.ஆனால் அதற்கு பின்னர் நடந்தவை தொடர்பில் திருப்தி கொள்ள முடியாது.
ஆனால் மக்கள் ஒரு தீர்மானம் எடுத்தனர், இவை அனைத்தையும் மாற்ற வேண்டும் என்று புதிய அரசாங்கத்தை பதவியில் அமர்த்தினர்.
இந்நிலையில், அரசாங்கத்திற்கு மக்கள் நிறைய மாற்றங்களை முன்வைத்துள்ளனர். மக்கள் எதிர்பார்த்த மாற்றங்களை அரசாங்கம் செய்ய தவறி மாறான பாதையில் செல்லுமானால் சிவில் செயற்பாட்டாளர்கள் என்ற வகையில் அரசாங்கத்திற்கு நாம் வழிகாட்ட காத்திருக்கிறோம்.
அத்தோடு போராட்டத்தில் நாம் எதிர்பார்த்த ஏனைய கொள்கைகளை நிறைவேற்றிக் கொள்ள அடுத்த கட்டம் தொடர்பிலும் நாம் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
