பசிலின் மீது குறிவைத்துள்ள அநுர அரசாங்கம்! நாட்டுக்கு திரும்பினால் கைது
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச அமெரிக்காவில் இருந்து இலங்கைக்கு திரும்பி வரும் பொழுது கைது செய்யப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது என்பதை பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் ஏற்றுக் கொண்டுள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலொன்றின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
நாமலுக்கு பயம்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
இந்த அரசாங்கம் ராஜபக்ச என்ற பெயருக்கு பயப்படுகின்றது. தற்போது முன்னிலையில் நாமல் ராஜபக்ச இருப்பதால் அவரைக் கண்டு இந்த அரசாங்கம் பயப்படுகின்றது.
பசில் ராஜபக்ச தற்போது இந்த நாட்டின் அரசியலுடன் தொடர்புபடவில்லை. எங்கது கட்சியின் விடயங்களிலும் அவர் சம்பந்தப்படவில்லை. இந்த நாட்டின் அரசியல்வாதியும் அல்ல அவர்.
அமைச்சு மற்றும் நாடாளுமன்ற உறுப்புரிமை ஆகியவற்றை துறந்து பசில் ராஜபக்ச செல்லும் போது இனிமேல் எக்காரணம் கொண்டும் இலங்கை அரசியலோடு தொடர்புபட மாட்டேன் என்பதை உறுதியாக சொல்லிச் சென்றார்.
பசில் கைது
நீதிமன்றில் முன்னிலையாக வேண்டிய சந்தர்ப்பத்தில் அமெரிக்காவில் வைத்து நாற்காலியில் இருந்து கீழே விழுந்ததால் தன்னால் வர முடியவில்லை என பசில் ராஜபக்ச அறிவித்தமை தொடர்பில் எனக்கு பூரணமாக தெரியாது. தொலைபேசி வாயிலாக சில ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ள மாத்திரமே நாம் பசில் ராஜபக்சவுடன் உரையாற்றுகின்றோம்.
ஆனால், பசில் ராஜபக்ச இலங்கைக்கு வந்தால் கைது செய்யப்படலாம் என்ற நிலையையும் மறுக்க முடியாது. எவ்வித தவறுகளும் மேற்கொள்ளவில்லையாயினும் கூட பொய்க் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் கைது செய்யும் நடவடிக்கையை தற்போதைய அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. எனவே பசில் ராஜபக்ச நாட்டுக்கு திரும்பி வந்தாலும் கூட அவருக்கும் இதே நிலை ஏற்படக் கூடும்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் கருத்துக்களுக்கு அமைய பசில் திரும்பி வரும் போது கைது செய்யப்படலாம் என்ற நிலை இருப்பதாக சிலர் கூறுகின்றனர். எவ்வாறாயினும் அது தொடர்பில் எனக்கு நம்பிக்கையில்லை என குறிப்பிட்டுள்ளார்.

இந்திய விமானப்படைத் திறனை அதிகரிக்க மாற்று திட்டம்., F-35, Su-57E போர் விமானங்களை தவிர்க்க வாய்ப்பு News Lankasri
