இயற்கை அனர்த்த முன்பாதுகாப்பு நிதிக்கு என்ன நடந்தது..!கணக்காய்வு அறிக்கையில் திடுக்கிடும் தகவல்
இயற்கை அனர்த்தங்களை தடுப்பதற்காக ஒதுக்கப்பட்ட நிதியில் 10 வீதமே செலவழிக்கப்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தேசிய கணக்காய்வு திணைக்களம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை, பல கட்டங்களை கொண்ட காலநிலை அனர்த்த தடுப்புத் திட்டத்தின் முதல் கட்டத்தை செயல்படுத்த ரூ. 27,600 மில்லியன் ஒதுக்கப்பட்டிருந்தாலும்,கடந்த மூன்று ஆண்டுகளில் (2021-2024) ரூ. 2,896.42 மில்லியன் அதாவது 10.49 சதவீதம் மட்டுமே செலவழிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
தடுக்கும் திட்டங்கள்
அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் காலநிலை மாற்றம் மற்றும் நீர்நிலை அபாயங்கள் குறித்த எச்சரிக்கைகளை மேம்படுத்துதல் மற்றும் காலநிலை மீள்தன்மையை மேம்படுத்துதல் ஆகியவை இந்த திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும்.
களனி ஆற்றுப்படுகையின் பல்நோக்கு நீர் உட்கட்டமைப்பை மேம்படுத்துவதே இந்த திட்டத்தின் மற்றொரு நோக்கமாகும்.

ஐந்து முக்கிய செயற்பாடுகள்
இந்த திட்டம் ஐந்து முக்கிய செயல்பாடுகளின் கீழ் செயல்படுத்தப்படுகிறது: அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் வானிலை நிலைமைகள், வெள்ளம் மற்றும் நிலச்சரிவு முன்னறிவிப்பு மற்றும் முன்கூட்டியே எச்சரிக்கை, களனி ஆற்றின் படுகையின் வெள்ள அபாயத்தைக் குறைப்பதற்கான முதலீடு ஆகியனவாகும்.

ஆனால் கோவிட் மற்றும் பொருளாதார நெருக்கடி போன்ற காரணங்களால் திட்டத்தின் முன்னேற்றம் குறைந்த மட்டத்தில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
வருமுன் காத்தல்: அனர்த்த காலத்தின் பேச்சாளர்கள் 8 மணி நேரம் முன்
மோடியிடம் கோரிக்கை வைத்த பாகிஸ்தான் பெண்: 2வது ரகசிய திருமணம்! கணவர் மீது குற்றச்சாட்டு News Lankasri