அரச எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் தனியாருக்கு: அமைச்சர் கஞ்சன விஜேசேகர
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான ஆயிரத்து 250 எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் ஒரு பகுதியின் நிர்வாகத்தை எதிர்வரும் நவம்பர் மாதம் தனியாருக்கு வழங்க உள்ளதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
எரிபொருளை இறக்குமதி செய்து விநியோகிக்கவும் அனுமதி
இதனடிப்படையில், அந்த நிறுவனங்களுக்கு எரிபொருளை இறக்குமதி செய்யவும், விநியோகிக்கவும் விற்பனை செய்யவும் அதிகாரத்தை வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
விலை மனுக்களை முன்வைத்துள்ள 24 நிறுவனங்கள்
எரிபொருள் நிரப்பும் நிலையங்களை பெற்றுக்கொள்ள 24 நிறுவனங்கள் விலை மனுக்களை முன்வைத்துள்ளதுடன் அவற்றில் தகுதியை பூர்த்தி செய்துள்ள சில நிறுவனங்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது.
இலங்கை பெட்ரோலிக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாகத்தின் கீழ் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையங்களை தனியாருக்கு வழங்கும் வேலைத்திட்ட்தின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில் கஞ்சன விஜேசேகர இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri
