விமான நிலைய வரியை ஆறு மாதங்களுக்கு நீடிக்க அரசாங்கம் ஒப்புதல்
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கான வரியை மேலும் ஆறு மாத காலத்துக்கு நீடிக்க அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.
வாராந்த அமைச்சரவை மாநாட்டில் இன்று (18.07.2023) உரையாற்றிய அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சரவை அங்கீகாரம்
மேலும், இந்த விடயம் தொடர்பில் துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப்
போக்குவரத்து அமைச்சர் பந்துல முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்
வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதற்கமைய யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கான வரி தொடர்பில் கால அவகாசம் நீடிப்பதன் மூலம் யாழ் விமான நிலையத்துக்கு ஊடாக பயணிக்கும், பயணிகள் மலிவு விலையில் விமான டிக்கெட்டுகளை வாங்க முடியும் எனவும் மேலும் இது யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தையும் மேம்படுத்தும் என்றும் அமைச்சர் பந்துல குணவர்தன கூறியுள்ளார்;.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
