அரச ஊழியர்களின் ஓய்வூதியம்:புதிய விதிமுறைகள் அறிமுகம்
அரச ஊழியர்களின் ஆட்சேர்ப்பில் 2016 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டவர்களின் நியமனக் கடிதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஓய்வூதிய உரிமை தொடர்பான விதிகளைத் திருத்துவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
திருத்தப்பட்டுள்ள விதிகள்
அரச ஊழியர்களுக்கு மிகவும் பொருத்தமான ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்துவது தொடர்பான 2016 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட முன்மொழிவின்படி, நியமனக் கடிதங்களில், "இந்த நியமனம் ஓய்வூதியத்திற்குரியது. உங்களுக்கு உரிமையுள்ள ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக அரசாங்கத்தின் எதிர்கால கொள்கை முடிவுக்கு நீங்கள் உட்பட்டுள்ளீர்கள்" என்று கூறும் ஒரு விதி சேர்க்கப்பட்டுள்ளது.
இருப்பினும், ஜனவரி 1, 2016 க்குப் பின்னர் அரச சேவையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் இன்னும் செயல்படுத்தப்படவில்லை.

மேலும் 2026 ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் குறித்த நியமனக் கடிதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஓய்வூதிய நிபந்தனைகளைத் திருத்தி, தற்போதுள்ள ஓய்வூதியத் திட்டத்திற்கான அவர்களின் உரிமையை உறுதிப்படுத்த முன்மொழியப்பட்டுள்ளது.
அதற்காக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
குடும்பம் முழுவதையும் இழந்த இலங்கையருக்கு கனடா தரப்பிலிருந்து ஒரு ஆறுதலளிக்கும் செய்தி News Lankasri