அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்கும் தீவிர முயற்சியில் ரணில் அரசாங்கம்
நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் தொடர்பாக பாரிய திட்டம் செயல்படுத்தப்படும். இது தொடர்பாக நாங்கள் ஏற்கனவே விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளோம் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன(Vajira Abeywardena) தெரிவித்துள்ளார்.
சம்பளம் அதிகரிக்கப்படும்
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்காக நாம் செயற்பட்டு வருவதோடு, இந்த நாட்டில் சமூக சந்தை பொருளாதார அமைப்பை உருவாக்குவோம்.
அதேபோன்று இந்த சமூக சந்தைப் பொருளாதார அமைப்பின் கீழ், சகலரும் சமத்துவமாக வாழும் பொருளாதாரத்தை உருவாக்குவோம்.
தற்காலிகமாக சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது. வாழ்க்கைச் செலவு உயர்ந்தால் மக்கள் வாழ முடியாது.
தற்போதைய அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கை நவதாராளவாதக் கொள்கையாகும். ஆனால், நிவாரணங்களை வழங்கும் பொருளாதார முறைக்குப் பதிலாக, மக்கள் சொந்தக் காலில் நிற்கக்கூடிய பொருளாதாரத்தை நாங்கள் ஏற்படுத்துவோம்.
கைத்தொழில், தொழிநுட்ப உற்பத்தி மற்றும் முதலீடுகளை அதிகரிப்பதன் மூலம் உள்ளுர் கைத்தொழில்களை மேம்படுத்துவதுடன் எதிர்காலத்தில் இந்நாட்டில் பாரிய பொருளாதார மாற்றமும் உருவாக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 2 நாட்கள் முன்

11 துப்பாக்கிகள், 40 கத்திகள்.,100 பேர் கைது! பிரித்தானிய பொலிஸாரின் முன்னெச்சரிக்கை எதற்காக? News Lankasri

எதிர்நீச்சல் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பிரபலம், அவரால் ஏற்படும் பரபரப்பு... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
