அனுர, சஜித் பிரேமதாசவிடம் ஜனாதிபதி விடுத்துள்ள கோரிக்கை
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டாம் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரிடம் ஜனாதிபதி கோரியுள்ளார்.
தேர்தல் பிரசார கூட்டமொன்றில் பங்கேற்ற போது அவர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து வாபஸ் பெற்றுக்கொண்டு ஐந்து ஆண்டுகளுக்கு தமக்கு ஆதரவளிக்குமாறு கோரியுள்ளார்.
பொருளாதார முன்னேற்றம்
சஜித் பிரேமதாச, அனுரகுமார திஸாநாயக்க, ஹர்ஸ டி சில்வா, சுனில் ஹந்துனெத்தி போன்றவர்களினால் இந்த நாட்டின் பொருளாதாரம் கட்டியெழுப்பப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.
தமது அரசாங்கம் கடந்த 2022 மற்றும் 2023ம் ஆண்டுகளில் பொருளாதாரத்தில் பாரிய முன்னேற்றத்தை பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
அரசியல் மேடைகளில் மக்களின் கஸ்டங்களை பற்றி பேசுவது பொருத்தமற்றது என ஜனாதிபதி விமர்சனம் செய்துள்ளார்.
நிவாரணங்களை இழக்க நேரிடும்
அனுரகுமார மற்றும் சஜித் ஆகியோர் இதனை செய்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
மக்களின் கஸ்டங்களை புரிந்து கொண்டிருந்தால் நெருக்கடியான தருணத்தில் இந்த நாட்டை பொறுப்பேற்றிருக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை திருத்தினால் மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணங்களை இழக்க நேரிடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |