அரச ஊழியர்களின் சம்பளத் தொகை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு
அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்புக்கு அரசாங்கம் 325 பில்லியன் ரூபா தொகை செலவிடும் என்று வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றையதினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அரச சேவையில் சம்பள உயர்வு
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
வங்குரோத்து நிலைக்குச் சென்ற நாடொன்று, அதிலிருந்து மீண்டு தாக்கல் செய்யும் முதலாவது வரவு செலவுத் திட்டம் இதுவாகும்.
அதனூடாக இந்த அளவுக்கு அரச சேவையில் சம்பள உயர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 2025 ஆம் ஆண்டில் 102 பில்லியன் ரூபாவும், 2026 ஆம் ஆண்டில் 128 பில்லியன் ரூபாவும், 2027 ஆம் ஆண்டில் 95 பில்லியன் ரூபாவும் செலவிடப்படும்.
அதன்படி, இந்த சம்பள அதிகரிப்புக்காக மொத்தம் 325 பில்லியன் ரூபாவை அரசாங்கம் செலவிடப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானிய கடற்கரைக்கு அருகே எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்திய ரஷ்ய போர்கப்பல்., நடந்தது என்ன? News Lankasri
முதலமைச்சர் மகனை திருமணம் செய்துகொண்ட நடிகை.. 11 நாட்களில் இறந்த கணவர்! இவர் வாழ்க்கையில் இவ்வளவு சோகமா Cineulagam
விமான கண்காட்சியில் கவனம் ஈர்த்த எதிர்கால ஆயுதம்: ஐரோப்பா-அமெரிக்கா இணைந்து உருவாக்கும் சக்திவாய்ந்த ட்ரோன் News Lankasri