வரவு செலவு திட்டம் தொடர்பில் நந்தலால் வீரசிங்க பெருமிதம்
சர்வதேச நாணய நிதியத்தின் நிலைப்படுத்தல் திட்டத்தின் அளவுருக்களின்படி செயல்படுவது அரசாங்கத்தின் பொறுப்பு என மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க(nandalal weerasinghe) கூறியுள்ளார்.
அதன்படி இந்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் நாட்டிற்கு ஒரு நல்ல விடயங்களை உள்ளடக்கியுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பில் இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர்,
வரவு செலவு திட்டம்
“அரசாங்கத்தின் இலக்கைப் பார்க்கும்போது, இந்த முறை நாம் வரவு செலவு திட்டதில் அதிக நம்பிக்கை வைக்க முடியும்.
அரசாங்கப் பத்திரங்கள் மீதான குறுகிய கால அழுத்தங்களை உள்வாங்க ஹெட்ஜிங்கைப்(சொத்துகளிலிருந்து இழப்பு ஏற்படும் போது அபாயத்தைக் குறைக்க வடிவமைக்கப்பட்ட ஒரு சொத்தை வாங்கும் செயற்பாடு) பயன்படுத்துவது முக்கியமாகும்.
இது நமது பணவியல் கொள்கையின்படி நிலையான வட்டி விகிதங்களை பராமரிக்க உதவும்.
பொருளாதார ஸ்திரத்தன்மை
பல ஆண்டுகளாக IMF உடனான விவாதங்களில் பங்கேற்ற ஒருவர் என்ற ரீதியில், இந்த முறை ஒரு நாடாக, ஒட்டுமொத்த பொருளாதார ஸ்திரத்தன்மைக்காக சரியான திசையில் செல்ல வெளிப்புற பங்குதாரர்களுக்கு அளிக்கப்பட்ட உறுதிமொழிகள் வரவு செலவு திட்டத்தில் மாறவில்லை என்று என்னால் கூற முடியும்.
நிர்வாகத்தில் மாற்றம் இருந்தபோதிலும், பேரண்டப் பொருளாதாரக் கொள்கைகளின் திசை மாறவில்லை.
IMF இன் ஒட்டுமொத்த பெரிய பொருளாதார நிலைப்படுத்தல் திட்டத்தின் அளவுருக்களுக்குள் செயல்படுவது அரசாங்கத்தின் பொறுப்பாக இருப்பதால், இதை ஒரு நேர்மறையான அறிகுறியாக நான் பார்க்கிறேன்" என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 7 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
