அரச ஊழியர்களுக்கு வழங்கப்படவுள்ள முதலாவது கொடுப்பனவு
தற்போதைய பொருளாதார நிலைமை சாதகமாக உள்ளதால் இந்த மாதம் அரச ஊழியர்களுக்கு 5000 ரூபாவை முதல் தவணையாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை செயற்படுத்தும் போது பெருந்தோட்ட மக்கள் குறித்து விசேட கவனம் செலுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதிகரிக்கப்பட்ட சம்பளம்
நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு கருதது வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
பொருளாதார பாதிப்பால் ஒட்டுமொத்த மக்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். வரவு செலவுத் திட்டத்தின் தீர்மானத்துக்கு அமைய அரச சேவையாளர்களின் சம்பளம் 10 ஆயிரம் ரூபாவால் அதிகரிக்கப்பட்டது.
இந்த அதிகரிப்பை எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது பொருளாதார நிலைமை சாதகமாக உள்ளதால் இந்த மாதம் 5000 ரூபாவை முதல் தவணையாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை செயற்படுத்தும் போது பெருந்தோட்ட மக்கள் குறித்து விசேட கவனம் செலுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பெருந்தோட்ட மக்களின் சம்பளம் தொடர்பில் ஜனாதிபதி நேரடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். வெகுவிரைவில் சாதகமான தீர்மானம் எடுக்கப்படும் என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |