அரச ஊழியர்களுக்கு தைப் பொங்கலின் பின்னர் பல சலுகைகள்
இவ்வருடம் தைப் பொங்கலின் பின்னர் அரச ஊழியர்களுக்கு நிவாரணங்கள் மற்றும் சலுகைகள் வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அனைத்து மக்களும் பொருளாதார சிரமங்களை எதிர்நோக்கியுள்ளமை தாம் நன்கு அறிவதாகவும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.
மக்களுக்கு நிவாரணம்
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தின் போது ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்திய பின்னர் அனைத்து மக்களுக்கும் பொருளாதார ரீதியான நிவாரணங்களை வழங்க முடியும்.
கடந்த வருடத்தில் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார சீர்திருத்தத்தின் காரணமாக நிலுவையிலிருந்து அனைத்து பத்திரங்களும் செலுத்தி முடிக்கப்பட்டுள்ளன.
அடுத்த நான்கு காலாண்டுகளில் பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்கு அவசியமான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதேபோல், இவ்வருட இறுதிக்குள் பொருளாதார வளர்ச்சி வேகத்தை 3% ஆக மேம்படுத்தவும், 2025 ஆம் ஆண்டில் 5% ஆக அதிகரித்துக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

6 நாள் முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் தமிழகத்தில் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam

ஈஸ்வரிக்கு ஆபத்து.. திருமண பிரச்சனைக்கு நடுவில் அடுத்த ஷாக்! எதிர்நீச்சல் தொடர்கிறது ப்ரோமோ Cineulagam
