நாடளாவிய ரீதியில் 2,302 பரீட்சை நிலையங்களில் உயர்தரப் பரீட்சைகள் ஆரம்பம்
நாடளாவிய ரீதியில் இன்று(04) ஆரம்பமான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை எவ்வித பிரச்சினையும் இன்றி வெற்றிகரமாக நடத்தப்டப்டதாக பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் உள்ள 2,302 பரீட்சை நிலையங்களில் இன்றையதினம் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இடம்பெற்றது.
ஆர்வமாக சென்ற மாணவர்கள்
இது குறித்து சிங்கள ஊடகம் ஒன்றிடம் கருத்து வெளியிட்ட பரீட்சைகள் ஆணையாளர் நாயகம், இன்று போலவே அடுத்த சில நாட்களிலும் பிரச்சினைகள் ஏதும் இன்றி பரீட்சைகள் நடத்தப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பரீட்சைக்கு வருகைத் தரும் மாணவர்களின் எண்ணிக்கையும் உகந்த மட்டத்தில் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் மிக ஆர்வத்துடன் பரீட்சை நிலையங்களுக்கு சென்றதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |