ஜனவரி முதல் அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு! ரணில் சொன்ன பொய் - அம்பலப்படுத்தும் அநுர தரப்பு
2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்த கருத்து பொய்யானது என தேசிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினர் லால்காந்த தெரிவித்துள்ளார்.
நாவலப்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பிப்பொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
ரணில் ஓய்வெடுக்கலாம்...
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு ரணில் விக்ரமசிங்க ஒதுக்கீடு செய்திருந்தால் பணத்தை வீட்டுக்கு எடுத்துச் சென்றிருப்பார் என்றுதான் கூற வேண்டும்.
ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்து வீட்டில் ஓய்வெடுப்பதற்குப் பதிலாக இவ்வாறான அறிக்கைகளை வெளியிடுவது நகைப்புக்குரியது.
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளதாகவும், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் சிலர் தேர்தல் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த பொய்யான அறிக்கைகளுக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் (14) நாட்டின் பெரும்பான்மையான மக்கள் பதிலடி கொடுப்பார்கள்.
நவம்பர் 14இற்குப் பிறகு நாட்டிலுள்ள அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்க்க தேசிய மக்கள் சக்தி 25 அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் 25 பிரதி அமைச்சர்களைக் கொண்ட வலுவான அரசாங்கத்தை நியமிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.