அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்கான காரணத்தை வெளியிட்ட ரணில்
வரிச்சுமையை பொதுமக்கள் தாங்கிக் கொண்டதனாலேயே பணம் அச்சடிக்காமலும் அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிக்க முடிந்தது. இதன் காரணமாகவே இந்த வருடம் அரச ஊழியர்களுக்கான சம்பளத்தையும் அதிகரிக்க முடிந்தது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.
கொழும்பு முகத்துவாரத்தில் நேற்று (09) நடைபெற்ற ரன்திய உயன வீட்டுத் தொகுதியை பயனாளிகளுக்குக் கையளிக்கும் நிகழ்விலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனை குறிப்பிட்டுள்ளார்.
அரச வருமானமும் ரூபாவின் பெறுமதியும்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இன்று வரையிலான இரண்டு வருடங்களுக்குள் நிம்மியாக மூச்சு விடக்கூடிய சூழலை எம்மால் உருவாக்க முடிந்துள்ளது.
உணவு, எரிவாயு, எரிபொருள் வரிசையில் நின்று அவதிப்பட்ட மக்கள் இன்று சுமூகமாக வாழ்கின்றனர். வரிசையில் யுகத்தில் கொழும்பு மக்கள் பெரும் அவதிப்பட்டனர்.
அதிலிருக்கும் மாடிக்குடியிருப்புகளிலும், தோட்டங்களிலும் வசிக்கும் மக்களும் கடும் அவதிக்குள்ளாகினர்.
பொருளாதாரத்தைப் பலப்படுத்த நாம் நடைமுறைப்படுத்திய வரிக் கொள்கை வாழ்க்கைச் சுமையை மேலும் அதிகப்படுத்தியது.
ஆனால் அந்த கஷ்டங்களை நீங்கள் தாங்கிக் கொண்டதாலேயே, கடன் வாங்காமலும், பணம் அச்சடிக்காமலும் அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிக்க முடிந்தது. அதனால் தான் இந்த வருடத்தில் அரச ஊழியர்களுக்கு 10,000 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்க முடிந்தது. ரூபாவின் பெறுமதியும் வலுவடைந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |