20ஆயிரம் ரூபா கோரும் அரச ஊழியர்கள் : நுவரெலியாவிலும் போராட்டம்
20 ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பைக் கோரி நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அரச ஊழியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நுவரெலியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்றைய தினம்(30) ஒன்று திரண்ட அரச ஊழியர்கள் இவ்வாறு அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தை முன்னெடுத்தனர்.
20 ஆயிரம் கோரும் அரச ஊழியர்கள்
இலங்கை அரசாங்கத்தினால் முன்வைக்கப்படவுள்ள வரவு - செலவுத் திட்டத்தின் ஊடாக 20,000 ரூபா கொடுப்பனவு அல்லது சம்பள அதிகரிப்பை கோரி நாடளாவிய ரீதியில் அரச ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கு ஆதரவாகவே நுவரெலியாவிலும் இன்று நண்பகல் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
இதில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி, அலுவலக சேவைகள் மற்றும் மாகாண அரசாங்க உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.





கேரளாவில் நிற்கும் பிரித்தானிய F-35 போர் விமானம்: இந்தியாவிற்கு லட்சங்களில் கிடைக்கும் வருமானம் News Lankasri
