அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தை தாமதப்படுத்த முடியுமா..! நிதி இராஜாங்க அமைச்சர்
ஜனவரியில், அரசின் செலவினம் அதன் வருவாயை விட மூன்று மடங்கு அதிகரித்துள்ளது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நாங்கள் தேர்தலை நடத்துவதற்கு எதிரானவர்கள் என்று அர்த்தம் இல்லை. ஜனவரியில், அரசின் செலவினம் அதன் வருவாயை விட மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.
ஓய்வூதியம் மற்றும் சமுர்த்தியை தாமதப்படுத்த முடியுமா?
இது செலவினங்களைப் பற்றிய புரிதலை அளிக்கிறது மற்றும் பெரும் சிரமங்களுடன் அதை ஒருவாறு நிர்வகிக்கிறோம்.
முன்னுரிமையை காரணம் காட்டி, அரச ஊழியர்களின் சம்பளத்தை ஒரு நாள் கூட ஒத்திவைக்க முடியுமா? ஓய்வூதியம் மற்றும் சமுர்த்தி கொடுப்பனவுகளை வழங்குவதை தாமதப்படுத்த முடியுமா? இதுவே தற்போது நாம் எதிர்கொள்ளும் பிரச்சினையாகும் என குறிப்பிட்டுள்ளார்.

மஞ்சள் கயிறு, நெற்றியில் குங்குமம்.. நம்ம இனியாவா இது? தனுஷ் பாடலுக்கு வைப் செய்யும் காட்சி Manithan
