ஒரே நேரத்தில் ஓய்வு பெறும் அரச ஊழியர்கள்! அரச சேவைகள் குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பு
அரச நிறுவனங்களால் பொது மக்களுக்கு வழங்கப்படும் சேவைகளை நெறிப்படுத்துவதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கமாகும் என்று உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக் பிரியந்த தெரிவித்துள்ளார்.
மேலும், இன்றையதினம் முதல் அரச சேவையில் இருந்து 30 ஆயிரம் அரச உத்தியோகத்தர்கள் ஓய்வு பெற்றாலும் அரச நிறுவனங்களினால் வழங்கப்படும் சேவைகளுக்கு இடையூறு ஏற்படாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புத்தளத்தில் இடம்பெற்ற அரச உத்தியோகத்தர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார்.
சட்டத்தில் திருத்தம்
பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகளை நெறிப்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
பிறப்புச் சான்றிதழைப் பெறுவதில் பொதுமக்களுக்கு ஏதேனும் சிரமம் ஏற்பட்டால் எதிர்காலத்தில் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும்.
அரச நிறுவனங்களால் பொது மக்களுக்கு வழங்கப்படும் சேவைகளை நெறிப்படுத்துவதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கமாகும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

விஜய்யை நெருங்கிய நபரின் தலையில் துப்பாக்கியை வைத்த பாதுகாவலர் - விமான நிலையத்தில் பரபரப்பு News Lankasri
