அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு!
அரசாங்கத்தின் சில அத்தியாவசிய செலவினங்களுக்கு நிதியை வழங்குவதற்கு அமைச்சரவை இன்று(13.02.2023) இணக்கம் வெளியிட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அரச ஊழியர்களுக்கான ஓய்வூதியம்
இது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதற்கமைய அரச ஊழியர்களுக்கான ஓய்வூதியம் தொடர்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
2022ஆம் ஆண்டு முதல் 18,000 இற்கும் மேற்பட்ட ஓய்வுபெற்ற அரச ஊழியர்களுக்கான ஓய்வூதிய நிலுவைகளை வழங்குவதற்கான நிதியை விடுவிக்கவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
நிதி விடுவிக்க அனுமதி
மேலும் பெரும் போகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்கும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 20 இலட்சம் வறிய குடும்பங்களுக்கு தலா 10 கிலோ வீதம் அரிசி வழங்கவும் தேவையான நிதியை வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் கொள்வனவு, நெல் கொள்வனவு, போசாக்குக் குறைபாட்டை நிவர்த்தி செய்தல் உள்ளிட்ட செலவினங்களுக்கும் இவ்வாறு நிதி விடுவிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.