30 ஆயிரம் அரச ஊழியர்கள் ஒரே நேரத்தில் ஓய்வு! அரசாங்கத்தின் அறிவிப்பால் ஏற்பட்ட குழுப்பம்
ஒரே தடவையில் பாரியளவு அரச ஊழியர்கள் ஓய்வு பெற்றுச் செல்வதால் அரச சேவையில் எத்தகைய வீழ்ச்சியும் இடம்பெறாது என்று உள்ளூராட்சி சபை இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் அரசாங்க ஊழியர்கள் 30,000ற்கும் மேற்பட்டோர் நாளையுடன் ஓய்வு பெற்று செல்கின்றனர்.
இந்த நிலையில், பெருமளவான ஊழியர்கள் ஒரே நேரத்தில் ஓய்வு பெற்றுச் செல்கின்றமை தொடர்பில் அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில்,
நாடளாவிய ரீதியில் அரசாங்க ஊழியர்கள் 30,000ற்கும் மேற்பட்டோர் ஓய்வு பெற்று செலகின்றனர். இவர்களின் வெற்றிடங்களை நிரப்புவதற்கு அரசாங்கம் உரிய வேலைத் திட்டத்தை முன்னெடுத்துள்ளது.
அதிக எண்ணிக்கையில் ஓய்வு பெற்றுச் செல்லும் நிலை
எவ்வாறெனினும் ஒரே தடவையில் இந்தளவு அதிக எண்ணிக்கையிலான அரசாங்க ஊழியர்கள் ஓய்வு பெற்று செல்வதால் அரச சேவையில் எத்தகைய வீழ்ச்சியும் இடம்பெறாது. அதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.
அரசாங்க ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதெல்லையை கடந்த அரசாங்கம் 65 என அறிவித்த போதும் தற்போதைய அரசாங்கம் அந்த வயதெல்லையை 60 ஆக அறிவித்துள்ள நிலையிலேயே இந்த வருடம் 31 ஆம் திகதியுடன் 30,000ற்கும் மேற்பட்ட அரசாங்க ஊழியர்கள் ஓய்வு பெறவுள்ளனர்.
கடந்த வருடத்தில் ஓய்வு பெற வேண்டிய அரசாங்க ஊழியர்கள் ஓய்வு பெற்றுச் செல்லாமை காரணமாகவே இந்த வருடம் அரச ஊழியர்கள் இந்தளவு அதிக எண்ணிக்கையில் ஓய்வுபெற்றுச்செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.