25 ஆயிரம் அரச ஊழியர்களின் விண்ணப்பம்! அரசாங்கம் வழங்கியுள்ள ஒப்புதல்
ஐந்தாண்டுகளுக்கு சம்பளம் பெறாது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விடுமுறைக்காக அரச ஊழியர்களிடம் இருந்து 25,000 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விண்ணப்பங்களில், 1,150 விண்ணப்பங்களுக்கு மட்டுமே ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்கள்
இதன்படி, கடந்த 15 ஆம் திகதி நிலவரப்படி, உள்நாட்டு விடுப்புக்காக 120 விண்ணப்பங்களும், வெளிநாட்டு விடுப்புக்காக 911 விண்ணப்பங்களும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
இதன்படி கடந்த 6 மாதங்களில் மட்டும் கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் இந்தத் தொகை அதிகரிக்கலாம் எனவும் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் மனித வள அபிவிருத்தி பிரிவின் மேலதிக செயலாளர் கே.ஆர் .உடுவாவல தெரிவித்தார்.
அரசாங்கத்துறைகளைச் சேர்ந்த ஊழியர்களில் பெரும்பாலானோர் கொரியா செல்வதற்காக வெளிநாட்டு விடுமுறைக்கு விண்ணப்பிக்கின்றனர்.
மேலும் பெரும்பாலான விண்ணப்பங்கள் மொழிப் பிரச்சினை காரணமாக நிராகரிக்கப்படுகின்றன என குறிப்பிட்டார்.