பாதாள உலகக் குழுவினருக்கு அடைக்கலம் கொடுக்கும் அரச ஊழியர்கள்: உளவுத்துறை தகவல்
பாதாள உலகக் குழுவினருக்கு அடைக்கலம் கொடுக்கும் சுமார் இரண்டாயிரம் அரச அதிகாரிகள் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
புலனாய்வு அமைப்புகளால் குறித்த விடயம் தொடர்பான அறிக்கை அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.
அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,
மக்களின் பாதுகாப்பு
பாதாள உலகக் குழுவினர் மற்றும் குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் அரசியல்வாதிகள், பொலிஸ் அதிகாரிகள், சிறைச்சாலை அதிகாரிகள் என சுமார் இரண்டாயிரம் அரச அதிகாரிகள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலைமை மாற்றப்படும் வரை பாதாள உலகத்தை ஒடுக்குவது கடினமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாள உலகப் புள்ளிகளை விடுவிப்பதற்காக பல்வேறு நிலைகளில் உள்ள அரசியல்வாதிகள் பொலிஸார் ஊடாக தலையிட்டுள்ளமையும் தெரியவந்துள்ளதாகவும் உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
சில அரசியல்வாதிகளுடன் பாதாள உலகக் குழுவினர் தொடர்பில் இருப்பதாகவும் அந்த அரசியல்வாதிகளிடமிருந்து இவர்களுக்கு உயர் பாதுகாப்பு கிடைப்பதை அறிய முடிவதாகவும் புலனாய்வுத்துறை வட்டாரங்கள் மேலும் கூறியுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 7 மணி நேரம் முன்

Brain Teaser Maths: சிந்திப்பால் எதையும் தாங்கும் சக்தி கொண்டவரால் தீர்க்க முடியும் புதிர் உங்களால் முடியுமா? Manithan

பிடிவாதத்தின் மறு உருவமாகவே உலாவும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

10-ம் வகுப்பு தேர்வில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி எடுத்த மதிப்பெண்கள் எவ்வளவு தெரியுமா? News Lankasri
