ஆளும் கட்சியினருக்கு ஒரு இடத்தில் எவ்வாறு நடந்து கொள்வது என்பது கூட தெரியாது
ஆளும் கட்சியினருக்கு ஒரு இடத்தில் எவ்வாறு நடந்து கொள்வது என்பது கூட தெரியாது என மனித உரிமை செயற்பாட்டாளரும் பேராசிரியருமான நிர்மால் ரஞ்சித் தெவ்சிறி குற்றம் சுமத்தியுள்ளார்.
ஆட்சி பொறுப்பினை ஏற்றுக்கொண்டதன் பின்னர், கொள்ளைப் பிரகடனத்தின் போது வழங்கப்படும் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமை யதார்த்தமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பொய்யுரைப்பதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் யதார்த்தமானது என அவர் தெரிவித்துள்ளார்.
தற்பொழுது ஆட்சி அதிகாரத்தைப் பெற்றுக்கொண்டவர்களுக்கு இந்த விடயங்கள் தொடர்பில் எவ்வித அனுபவமும் இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் ஒர் இடத்தில் எவ்வாறு பேசுவது நடந்து கொள்வது என்பது குறித்த புரிதல் அற்றவர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த அரசாங்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு களவெடுக்கத் தெரியாது எனவும் அதனால் அவர்கள் களவாடவில்லை எனவும் பேராசிரியர் நிர்மால் ரஞ்சித் தெவ்சிறி தெரிவித்துள்ளார்.