ஆனந்தவர்மனின் விடுதலையில் அக்கறைகொள்ளாத அரசு : முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

Sri Lankan Tamils Colombo Vavuniya Prisons in Sri Lanka
By Kajinthan May 15, 2024 10:26 PM GMT
Report

கொழும்பு விளக்கமறியல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் நிலையில், கடந்த ஒன்பது நாட்களாக உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற சமூக செயற்பாட்டாளரான செல்வநாயகம் ஆனந்தவர்மனை நேற்றையதினம் குரலற்றவர்களின் குரல் அமைப்பினர் சிறை வைத்தியசாலைக்கு நேரில் சென்று சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

இதன்போது குரலற்றவர்களின் குரல் அமைப்பினர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, இல.117, தோணிக்கல் -வவுனியா என்ற முகவரியைச் சேர்ந்த ஆனந்தவர்மன், கடந்த 26.03.2024 அன்று பயங்கரவாத விசாரனைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

இலங்கை பிரஜையின் தீவிரவாத தாக்குதல் வழக்கு: தலைமறைவான சந்தேகநபரை சுற்றிவளைத்த என்ஐஏ அமைப்பு

இலங்கை பிரஜையின் தீவிரவாத தாக்குதல் வழக்கு: தலைமறைவான சந்தேகநபரை சுற்றிவளைத்த என்ஐஏ அமைப்பு

காலவரையரையற்ற விளக்கமறியல்

இவர் தனது முகநூல் பக்கத்தினூடாக மக்களிடையே பிரச்சினைகள் ஏற்படக்கூடிய வகையில் பதிவுகளை இட்டு வந்துள்ளதாக குற்றம் சுமத்தியுள்ள பயங்கரவாத தடுப்புப் பிரிவினர், கொழும்பு - நீதவான் நீதிமன்ற கட்டளையினை பெற்றுக்கொண்டு, சமூகச் செயட்பாட்டாளரான தன்னை, மறு அழைப்புத் திகதி எதுவுமின்றி கொழும்பு - விளக்கமறியல் சிறையில் காலவரையரையற்ற விளக்கமறியலில் தடுத்து வைத்துள்ளதாக தெரிவித்திருக்கின்றார்.

ஆனந்தவர்மனின் விடுதலையில் அக்கறைகொள்ளாத அரசு : முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு | Government Does Not Care Anandavarman S Release

இந்நிலையில், இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர் தன்னை, "உடனடியாக விடுதலை செய்யவேண்டும். அவ்வாறில்லையேல், தன்மீது பொய்யாகப் புனையப்பட்டுள்ள குற்றச் சாட்டுகளுக்கமைய மேல் நீதிமன்றில் குற்றப் பத்திரம் தாக்கல் செய்து மன்றில் முன்னிலைப்படுத்த வேண்டும்" என்ற கோரிக்கைகளை முன்வைத்து கடந்த ஒன்பது நாட்களாக சிறைக்குள் இருந்தவாறு உணவுத் தவிர்ப்புப் பேராட்டத்தில் தன்னை ஈடுபடுத்தி வருகின்றார்.

யுத்தத்தின்போது கடுமையான விழுப்புண்களுக்கு ஆளாக்கப்பட்ட ஆணந்தவர்மன், ஏற்கனவே கடந்த 2009ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சுமார் ஏழு வருடங்கள் சிறைவாசம் அனுபவித்து விடுதலை பெற்றிருந்தவர் என்பது கவனிக்கத்தக்கது.

ஒட்டுமொத்த ஆன்மாவையும் பாதித்த மே 18ஐ தமிழ் தேசிய துக்க தினமாக அனுஷ்டிக்க வேண்டுகோள்

ஒட்டுமொத்த ஆன்மாவையும் பாதித்த மே 18ஐ தமிழ் தேசிய துக்க தினமாக அனுஷ்டிக்க வேண்டுகோள்

தமிழ் மக்களின் காணிகள்

அதனடிப்படையில், நீண்டகாலமாக உடல் உள ரீதியில் பாதிக்கப்பட்டிருந்த இவர், தற்போது ஒன்பது நாட்களை கடந்தும் உறுதியோடு மேற்கொண்டு வருகின்ற உணவுத் தவிர்ப்பு காரணமாக உடல் உருக்குலைந்து மிகவும் சோர்வுற்ற நிலையில் வெலிக்கடை சிறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எனவே, இதன்மூலம் மக்களின் பக்கம் நின்று ஜனநாயக வழியில் பொதுவெளியில் செயற்பட்டு வருகின்ற சிவில் செயற்பாட்டாளர்கள் மீது அரச இயந்திரங்களைக்கொண்டு மறைகரமாக அடக்குமுறைகளை மேற்கொண்டு, சட்டத்தின் பெயரில் குரல்வளைகளை நசுக்குகின்ற செயல்களில் அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றமையை காணமுடிகிறது.

ஆனந்தவர்மனின் விடுதலையில் அக்கறைகொள்ளாத அரசு : முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு | Government Does Not Care Anandavarman S Release

உதட்டளவில் மாத்திரமே நல்லிணக்கம் பேசுகின்ற அரசானது மிகநீண்ட காலங்களாக தடுத்துவைக்கப்பட்டுள்ள 12 தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, வருடக்கணக்காக தெருப்போராட்டம் நடாத்திவருகின்ற காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கான நீதி, பாதுகாப்பு -தொல்லியல்-வனவளம் என்ற பெயர்களில் கையகப்படுத்தப்பட்ட இன்றும் கையகப்படுத்திக் கொண்டிருக்கின்ற தமிழ் மக்களின் காணிகள் விடுவிப்பு, போரை காரணம்காட்டி அநியாயமாக உயிர்பறிக்கப்பட்ட தமது உறவுகளின் ஆத்மாக்களை நினைவேந்தி ஆறுதலுறுகின்ற அடிப்படை மனித உரிமைகள் மறுக்கப்படுகின்றமை போன்ற வெகுமக்களின் பல்வேறு வாழ்வியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதை விடுத்து அச்சுறுத்தல்களை தொடர்வதன் மூலம் அரசு இந்த நாட்டை எத்திசை நோக்கி கொண்டுசெல்ல முனைகிறது?

எனவே, மக்கள் நலனை மகுட வாசகமாக கொண்டியங்கும் அரசியல் மற்றும் குடிமக்கள் சார் அமைப்புகள், 'வீதி வரையே பிரச்சினை, எம் வீட்டுக்குள் வரவில்லை' என்று வேடிக்கை பார்த்துக்கொண்டிராது ஜனநாயக த்தின் குரல்களுக்கு ஆபத்து நேருகின்றபோது யாராக இருந்தாலும் அதனை தட்டிக் கேட்கின்ற மனநிலையுடன் கருமமாற்றுவதன் ஊடாகவே எதிர்பார்க்கின்ற மக்களாட்சியின் அடைவுமட்டத்தை அன்மிக்க முடியுமென்பதை தயவுடன் வலியுறுத்த கடமைப்படுகிறோம் என குறிப்பிட்டுள்ளது.

சீனா செல்லும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின்

சீனா செல்லும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின்

முல்லைத்தீவில் நீர் சுத்திகரிப்பு நிலைய நிர்மாணத்திற்கு அடிக்கல் நாட்டல் நிகழ்வு

முல்லைத்தீவில் நீர் சுத்திகரிப்பு நிலைய நிர்மாணத்திற்கு அடிக்கல் நாட்டல் நிகழ்வு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 



Gallery
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொழும்பு, Brampton, Canada

29 Jun, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, தமிழீழம், சென்னை, India

30 Jun, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

ஒமந்தை, Birmingham, United Kingdom

23 Jun, 2025
மரண அறிவித்தல்

வடமராட்சி, London, United Kingdom

23 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Stains, France

22 Jun, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Wembley, United Kingdom

05 Jul, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, ஜேர்மனி, Germany

08 Jul, 2015
13ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
மரண அறிவித்தல்

சுழிபுரம், சுதுமலை, வவுனியா, Colombes, France

30 Jun, 2025
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, நியூ யோர்க், United States, கோண்டாவில் கிழக்கு

30 Jun, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரெழு, கிளிநொச்சி

01 Jul, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

01 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Herne, Germany

30 Jun, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரங்குணை, குப்பிளான், சென்னை, India, Toulouse, France

24 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
38ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், India, புங்குடுதீவு

30 Jun, 1987
மரண அறிவித்தல்

புளியங்கூடல், கல்விளான், விசுவமடு, கொக்குவில், Paris, France, Basel, Switzerland

27 Jun, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், திருநகர், Scarborough, Canada

01 Jul, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US