குறுகிய காலத்தில் மக்கள் மத்தியில் அதிருப்தியடைந்துள்ள அரசாங்கம்
நல்லாட்சி அரசாங்கத்தை விட தற்போதைய அரசாங்கம் கூடிய விரைவில் மக்களின் அதிருப்திக்கு உள்ளாகி இருப்பதாக பொங்கமுவே நாலக தேரர் தெரிவித்துள்ளார்.
மக்களின் இதய துடிப்பை அறிந்தவர்கள் என தேர்தல் மேடைகளில் கோஷமிட்டு ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கத்தினர், மிகவும் குறுகிய காலத்தில் மக்களின் அதிருப்தியை அதிகளவில் சம்பாதித்துள்ளனர் எனவும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பில் உள்ள தனது விகாரையில் நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்த எரிபொருள் விலைகளை அதிகரித்துள்ளதாக கூறினாலும் அது கேலிக்குரிய கதை. இது அன்றாடம் சம்பாதித்து வாழும் மக்களை தூக்கிய தரையில் அடித்ததை போன்றது.
நல்லாட்சி அரசாங்கத்தின் மீது கொண்டிருந்த அதிருப்தி காரணமாக தற்போதைய அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வர பங்களிப்புச் செய்த பௌத்த பிக்குமாரும் தற்போது அமைதியாக இருக்க நேரிட்டுள்ளது.
தற்போதைய அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வந்தமை குறித்து மக்கள் தம்மிடம் கேள்வி எழுப்புவதாகவும் நாலக தேரர் குறிப்பிட்டுள்ளார்.