ஊடகங்களை ஒடுக்கி ஊமையாக்க அரசு விடாமுயற்சி: சிறிநேசன் குற்றச்சாட்டு
ஊடகங்களை ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு என்ற போர்வையில் ஊடகங்களை ஒடுக்குவதற்கான செயற்பாட்டைச் செய்வதற்கு அரசு முனைந்துகொண்டிருக்கின்றது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் குற்றம் சாட்டியுள்ளார்.
இன்றையதினம் (23.06.2023) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,
"மொட்டுக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்த கலப்பட அரசே இவ்வாறு முயற்சி செய்கிறது.
அரசின் இந்த நடவடிக்கையால் ஊடகத்துறை ஊமையாக்கப்படுவது மட்டுமல்லாமல் செய்தி எழுத்தாளர்களின் கைகளுக்கு விலங்கு போடக்கூடிய அல்லது அவர்களுடைய விரல்களை உடைக்கக்கூடிய நிலைமை தோன்ற வாய்ப்பிருக்கின்றது.
நசுக்கப்படும் குரல் வளைகள்
மேலும், ஜனநாயகத்தின் நான்காவது தூணாகக் கருத்தப்படுகின்ற ஊடக சுதந்திரத்தை மட்டுப்படுத்தி - கட்டுப்படுத்தி முடமாக்கக்கூடிய ஒரு சூழ்நிலை இருக்கின்றது. மக்களின் குரல் ஊடகத்தின் மூலமாக வெளிக்கொண்டுவரக்கூடிய வாய்ப்பு அங்கு தடுக்கப்படுகின்றது.
அதாவது மக்களின் குரல் வளைகள் நசுக்கப்படுவதற்கும் அவர்களுடைய பேச்சுரிமை, எழுத்துரிமை, மற்றும் கருத்துரிமை மறுக்கப்படுவதற்குமான வாய்ப்பு இருக்கின்றது.
அரசியல்வாதிகளின் ஊழல், மோசடிகள், கையூட்டுகள் மற்றும் அதிகார துஷ்பிரயோகங்கள் அதிகரிப்படுவதற்கும், அவை பற்றி விமர்சிப்பவர்களின் குரல் ஊமையாக்கப்படுவதற்கும் வாய்ப்பு இருக்கின்றது.
முற்போக்கான - புரட்சிகரமான கருத்துக்கள், சிந்தனைகள், செயற்பாடுகள் முற்றாக ஒடுக்கப்படுவதற்கும் வாய்ப்பு இருக்கின்றது. இதனால் ஆட்சியாளர்கள் சர்வாதிகாரிகளாக மாறுவதற்கும் வாய்ப்பு இருக்கின்றது.
கலாசார அழிப்புக்கள்
எனவே, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மக்கள் நலன் பற்றி சிந்திக்கின்ற செயற்பாட்டாளர்கள் இந்தச் சட்டமூலத்தை எதிர்த்து இந்த சட்டமூலம் சட்டமாக வராமல் தடுப்பதன் மூலமாக மக்களின் உரிமைகளை, மக்களின் சுதந்திரத்தை, ஊடக தர்மத்தைப் பேணிப் பாதுகாக்க வேண்டும் என்று பொறுப்புடன் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
கடந்த காலத்தில் இன அழிப்பு இடம்பெற்று அதற்குரிய நீதி கிடைக்கவில்லை. தற்போது குறிப்பாக கலாசார அழிப்புக்கள் நடைபெற்று வருகின்றன. கிழக்கிலும் பல இடங்களைக் குறி வைத்து பௌத்த மயமாக்கலுக்கான இடங்களாக அவர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.
இது மீண்டும் நட்டமடைந்த அரசியல் பாதையை இலாபமான பாதைக்குக் கொண்டு செல்வதற்கு முயல்கின்றார்கள். 75 ஆண்டுகள் சென்றாலும் இந்த இனவாதிகள், மதவாதிகள், திருந்தக் கூடிய நிலையில் இல்லை.
தமிழர்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையைப் பயன்படுத்தி வடக்கு கிழக்கில் பௌத்த மயமாக்கலைச் செய்துவிட்டால் அவர்கள் அடிமைகள் போல் அடங்கிக் கிடப்பார்கள், அவர்கள் அவர்களது உரிமைகளைக் கேட்பதற்குரிய எந்தவித தடையங்களும் இல்லாமல் செய்யும் செயற்பாடுகள் நடைபெறுகின்றன என தெரிவித்துள்ளார்.
மேலதிக செய்தி-ருசாத்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri

இந்த தேதியில் பிறந்தவங்க 30 வயசுக்குள்ள கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்களுக்கும் யோகம் இருக்கா? Manithan
