தேர்தல் களத்திலேயே அரசு தோற்கடிக்கப்படும் - மனோ கணேசன் எம்.பி முழக்கம்

Anura Kumara Dissanayaka Mano Ganeshan Election NPP Government
By Rakesh Sep 07, 2026 06:40 AM GMT
Report

சிவப்பு ஜுண்டாக்களுக்கு அஞ்சித் தாம் ஒருபோதும் இரண்டுக்கு மூன்றாக வளைந்துகொடுக்கப் போவதில்லை எனவும், வன்முறை வழிகளில் அல்லாமல் ஜனநாயக ரீதியிலான தேர்தல் களத்திலேயே அரசு தோற்கடிக்கப்படும் எனவும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையிலான ஐக்கிய குடியரசு முன்னணியின் நான்காவது தேசிய மாநாடு நேற்றுமுன்தினம்(05.09.2026) இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்றது.

அரசியல் தலைவர்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கட்சியின் ஆதரவாளர்கள் பலரும் கலந்துகொண்ட இந்நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

எந்தவித அச்சமும் இல்லை

மேலும் தெரிவிக்கையில், "நாட்டின் தற்போதைய அரசியல் சூழலில் பல்வேறு சவால்களுக்கும் அழுத்தங்களுக்கும் மத்தியில் எதிர்க்கட்சிகள் செயற்பட வேண்டியுள்ளது.

தேர்தல் களத்திலேயே அரசு தோற்கடிக்கப்படும் - மனோ கணேசன் எம்.பி முழக்கம் | Government Defeated Election Itself Mano Ganesan

இரண்டுக்கு மூன்றாக வளைந்துகொடுக்குமாறு எமக்குக் கூறப்பட்டால், அதற்கு அஞ்சி வளைந்துகொடுக்க வேண்டிய அவசியமோ, சிவப்பு ஜுண்டாக்களுக்கு அஞ்ச வேண்டிய அவசியமோ எமக்குக் கிடையாது.

எமக்கு எந்தவித அச்சமும் இல்லை என்பதை மிகத் தெளிவாகக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

அரசியல் களத்தில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக ஒன்றிணைந்தே தமது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றன.

அஞ்சுவதும் இல்லை, வளைந்துகொடுப்பதும் இல்லை என்பதில் நாம் மிகவும் உறுதியாக இருக்கின்றோம். வேறுவேறு அரசியல் சித்தாந்தங்களைக் கொண்ட கட்சிகளாகிய எமக்குள் கருத்து வேறுபாடுகளும் உள்முரண்பாடுகளும் காணப்படலாம்.

ஆனால், தனிப்பட்ட அல்லது கட்சி நலன்களுக்கு அப்பால் தேசியப் பற்றும் நாட்டின் ஜனநாயக உரிமைகளும் எமக்கு மிக முக்கியமாகும். அந்த வகையில், மக்கள் நலன் சார்ந்து நாம் கொள்கை ரீதியாக இணைந்து செயற்படுவதில் எந்தவிதப் பிரச்சினையோ அல்லது தயக்கமோ எமக்கு இல்லை. 

தேர்தலில் வீழ்த்துவதற்கான சரியான சந்தர்ப்பம்

அதேவேளை, மக்கள் ஆணையினால் ஜனநாயக ரீதியாகத் தெரிவு செய்யப்பட்ட அரசு ஒன்றைச் சட்டவிரோதமான முறையிலோ, வன்முறைகள் மூலமாகவோ அல்லது வீதியில் இறங்கி கலவரங்களை ஏற்படுத்தியோ நாம் ஒருபோதும் கவிழ்க்க மாட்டோம்.

தேர்தல் களத்திலேயே அரசு தோற்கடிக்கப்படும் - மனோ கணேசன் எம்.பி முழக்கம் | Government Defeated Election Itself Mano Ganesan

எமது கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களோ அல்லது கட்சிகளோ வரலாற்று ரீதியாக அவ்வாறான வன்முறை அரசியலை முன்னெடுத்ததும் இல்லை, அதனை ஆதரித்ததும் இல்லை.

ஆனால், அரசை நடத்தி வரும் தற்போதைய ஆட்சியாளர்களே கடந்த காலங்களில் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டங்களையும் கலவரங்களையும் செய்து, அன்றைய அரசுகளை நிலைகுலையச் செய்தனர் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.

எனவே, எமது எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்து யாரும் தேவையின்றிப் பதற்றமடையவோ அல்லது தேவையற்ற அச்சம் கொள்ளவோ வேண்டியதில்லை. 

அரசமைப்புக்கு உட்பட்டு, தேர்தல் மூலம் ஜனநாயக வழியிலேயே நாம் இந்த அரசி வீழ்த்துவோம். அது அரசமைப்பு ரீதியாக எதிர்க்கட்சிகளுக்கும் இந்த நாட்டின் மக்களுக்கும் வழங்கப்பட்டுள்ள ஜனநாயக உரிமையாகும்.

சரியான முறையில், சட்டபூர்வமான தேர்தல் களத்திலேயே இந்த அரசைத் தோற்கடிப்போம் என்ற செய்தியை உறுதியாகக் கூற விரும்புகின்றோம். தற்போதைய ஆட்சியாளர்களின் தவறான நிர்வாக நகர்வுகளும் முடிவுகளுமே, அவர்களைத் தேர்தலில் வீழ்த்துவதற்கான சரியான சந்தர்ப்பத்தை எமக்கு ஏற்படுத்தித் தரும்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அநுர அரசிடம் சிக்கியுள்ள ராஜபக்சர்களின் மறைக்கப்பட்ட இரகசியங்கள் - கலக்கத்தில் மகிந்த குடும்பம்

அநுர அரசிடம் சிக்கியுள்ள ராஜபக்சர்களின் மறைக்கப்பட்ட இரகசியங்கள் - கலக்கத்தில் மகிந்த குடும்பம்

வெளிநாட்டில் இருந்து திருமணத்திற்காக இலங்கை வந்த குடும்பத்திற்கு அதிர்ச்சி - 4 வயது சிறுவன் பலி

வெளிநாட்டில் இருந்து திருமணத்திற்காக இலங்கை வந்த குடும்பத்திற்கு அதிர்ச்சி - 4 வயது சிறுவன் பலி

நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 22

3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US