அரசாங்கம் சர்வதேசத்தை மீண்டும் ஏமாற்றப்போகிறதா? ஏமாறப்போகிறதா? (வீடியோ)
இலங்கையில் காலத்துக்கு காலம் ஆட்சிக்கு வருகின்ற அரசாங்கங்கள் எவையும் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை காண்பதை காட்டிலும், மாற்று உத்திகளையே கையாண்டு வருவதை அவதானிக்க முடிகிறது.
பிரச்சினைகளுக்கான தீர்வுகளை தள்ளிப்போடுவது, அல்லது அதனை அரசியல் ரீதியில் பார்ப்பது அல்லது வாக்குறுதிகளை வழங்கி விட்டு அதனை நிறைவேற்றாமல் விடுவதே இலங்கை அரசாங்கங்களின் உத்திகளாக இருந்து வருகின்றன.
இதன் காரணமாகவே இலங்கை நாடு இன்று பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது.
இந்தநிலையில் தற்போதைய அரசாங்கமும், அதே கொள்கையையே கடைபிடித்து வருகிறது
உள்ளுார் பிரச்சினை உள்ளுாரிலேயே தீர்க்கப்படவேண்டும் என்று கூறுகின்ற அரசாங்கம், அதனை நிறைவேற்றாமை காரணமாக, உள்ளுார் பிரச்சினைகளும் சர்வதேச மயப்படுத்தப்பட்டுள்ளன.
இதற்கு இலங்கையின் இனப்பிரச்சினை மற்றும் சர்வதேச பிரச்சினையாக மாறப்போகும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் பிரச்சினைகளை உதாரணங்களாக கூறலாம்.
இந்த சூழ்நிலையில் கோட்டாபய அரசாங்கம் எதிர்கொள்கின்ற பிரச்சினைகள் தொடர்பில் தயாரிக்கப்பட்ட காணொளி உங்களுக்காக-



