மதரீதியான பிரச்சினைகளை உருவாக்கியுள்ள பேரினவாத அரசு : மாவை சேனாதிராஜா (Video)
தமிழர்கள் மீது இனரீதியான முரண்பாடுகளை ஏற்படுத்தி வந்த பேரினவாத அரசு இப்போது மதரீதியான பிரச்சினைகளையும் உருவாக்கியுள்ளது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழரசு கட்சியினுடைய கிளிநொச்சி மாவட்டக் கிளையின் நிர்வாக தெரிவு இன்று(30-08-203) கட்சியினுடைய அலுவலகமான அறிவகத்தில் நடைபெற்றுள்ளது.
இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போது அது அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மதரீதியான வன்முறைகள்
இதுவரை காலமும் தமிழர்கள் மீது இனரீதியான ஒடுக்கு முறைகளை மேற்கொண்ட பேரினவாத அரசு இப்போது மதரீதியான வன்முறைகளை பிரயோகித்து வருகின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேற்படி இலங்கை தமிழரசு கட்சியின் கிளிநொச்சி மாவட்ட கிளை நிர்வாகத் தெரிவில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் குருகுல ராஜா மற்றும் கட்சியின் செயற்பாட்டாளர்கள் மாவட்ட கிளை நிர்வாகத்தினர் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.





