“அரசாங்கம் பல அத்தியாவசிய பொருட்களின் மீதான கட்டுப்பாட்டு விலையை நீக்கவில்லை” - விஜித ஹேரத்
டொலர் நெருக்கடியின் காரணமாக, இலங்கை அரசாங்கம் பல அத்தியாவசிய பொருட்களின் மீதான கட்டுப்பாட்டு விலையை நீக்கவில்லை என்று ஜேவிபி தெரிவித்துள்ளது.
ஜேவிபி நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்(Vijitha Herath) செய்தியாளர் சந்திப்பில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அரிசியின் விலையை ஜனாதிபதியோ அல்லது அரசாங்கமோ தீர்மானிக்க முடியவில்லை. மாறாக அது அரிசி ஆலை உரிமையாளர்களால் தீர்மானிக்கப்படுகிறது.
எரிவாயு, பால்மா, கோதுமை மா, மற்றும் சிமென்ட் ஆகியவற்றின் விலைகள் இப்போது நிறுவனங்களால் நிர்ணயிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எரிவாயு, பால்மா, கோதுமை மா, மற்றும் சிமென்ட் மீதான கட்டுப்பாட்டு விலையை அரசாங்கம் நீக்கியமைக்கு. டொலர் நெருக்கடி ஒரு பிரச்சினை அல்ல. டொலர் நெருக்கடிக் காரணமாக, அரிசி விலையை அதிகரிக்க வேண்டிய அவசியமில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார்.
அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு மற்றும் டிரில்லியன் கணக்கில் பணத்தை அச்சிடுவதால் பணவீக்கம் அதிகரிக்கிறது. இதனால் மக்கள் கடுமையான பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர்.
மத்திய வங்கி இப்போது 2 லட்சம் கோடிக்குப் பணத்தை அச்சடித்துள்ளது. இதன் காரணமாகப் பொருட்களின் விலைகள் உயர்கின்றன. வட்டி விகிதம் உயர்கிறது. இருப்பினும், மக்களின் சம்பளம் மற்றும் வருமானம் தேக்க நிலையில் உள்ளன என்றும் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri
பாகிஸ்தானில் இருந்து பாதியில் நாடு திரும்பும் 8 இலங்கை கிரிக்கெட் வீரர்கள்: ஒருநாள் தொடர் ரத்து? News Lankasri