கடும் அதிருப்தியில் அரசின் கூட்டணிக் கட்சிகள்: கோட்டாபய அரசாங்கம் பெரும்பான்மை பலத்தை இழக்கவும் வாய்ப்பு?
தமது கருத்துக்களுக்கு செவிக்கொடுக்காத காரணத்தினால், அரசாங்கத்தின் பல கூட்டணிக் கட்சிகள் கடும் அதிருப்தியில் இருப்பதாக தெரியவருகிறது.
20வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் மூலம் யுகதனவி மின் உற்பத்தி நிலையம் வரையான பிரச்சினைகளில் அரசாங்கத்தின் பிரதான கட்சி செயற்பட்ட விதம் குறித்து ஏனைய கூட்டணி கட்சிகள் கடும் அதிருப்தியில் இருப்பதாக அரசியல் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.
இந்த நிலைமையின் அடிப்படையில், எதிர்காலத்தில் அந்த கட்சிகள் எடுக்கக் கூடிய அரசியல் ரீதியான நடவடிக்கைகள் சம்பந்தமாக கலந்துரையாடி வருவதாக கூறப்படுகிறது.
தற்போது கிடைத்துள்ள தகவல்களின்படி அரசாங்கத்தின் இந்த கூட்டணி கட்சிகள் சுமார் 40 நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்டுள்ளன எனவும் தேவையான நேரத்தில் அரசாங்கம் தனக்கு இருக்கும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை இழப்பது நிச்சயம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் மக்கள் எதிர்நோக்கியுள்ள பசளை பிரச்சினை உட்பட பொருளாதார பிரச்சினைகள் காரணமாக தமது தேர்தல் தொகுதிகளுக்கு செல்ல முடியாது கொழும்பில் உள்ள உத்தியோகபூர்வ இல்லங்களிலேயே தங்கி இருக்கும் ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும், இந்த பிரச்சினையை தாம் வெளியேற வாய்ப்பாக பயன்படுத்தும் சந்தர்ப்பம் உருவாகியுள்ளது.
இந்த நிலைமை உக்கிரமடைந்தால், அரசாங்கம் 112 என்ற சாதாரண பெரும்பான்மை பலத்தை தக்கவைத்து கொள்வதிலும் கடும் பிரச்சினை உருவாகும் எனவும் தகவல்கள் கூறுகின்றன.
எது எப்படி இருந்த போதிலும் எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தின் போதோ, அதற்கு முன்னதாகவோ இந்த அரசியல் நெருக்கடி உருவாகாது எனவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கீழ் மட்டத்தில் கமத்தொழிலாளர்களின் போராட்டம் பெரியளவில் அதிகரிக்கலாம் எனக் கூறப்படும் பெரும் போக அறுவடையின் இறுதியில் மேற்கூறிய அரசியல் நெருக்கடி உருவாக வாய்ப்புள்ளதாகவும் பேசப்படுகிறது.
அதிகரித்து வரும் இந்த நிலைமை சம்பந்தமாக அரசாங்கத்தின் உயர் மட்டத் தலைவர்கள் கூடுதல் கவனத்தை செலுத்தியுள்ளதாக தெரியவருகிறது.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 13 மணி நேரம் முன்

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam
