அம்பாறையில் லொறியுடன் அரச பேருந்து மோதி விபத்து
அம்பாறை(Ampara) மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாண்டிருப்பு மகா வித்தியாலயத்திற்கு முன்பாக மீன் ஏற்றிச் சென்ற சிறிய ரக லொறியுடன் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த விபத்தானது இன்று (13) காலை இடம்பெற்றுள்ளது.
மேலதிக சிகிச்சை
கல்முனை மட்டக்களப்பு பிரதான வீதி வழியே அக்கரைப்பற்று பகுதியில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துடன், மட்டக்களப்பு கல்முனை வீதி வழியாக வந்த சிறிய ரக மீன் ஏற்றிச் சென்ற லொறி மோதி விபத்து ஏற்பட்டுள்ளதுடன் பேருந்து பகுதி அளவில் சேதமடைந்துள்ளது.
இதன் போது வாகன சாரதிகள் காயமடைந்த நிலையில் அருகில் உள்ள வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் சிறிய ரக மீன் ஏற்றிச் செல்லும் லொறி வேகக் கட்டுப்பாட்டை மீறி பயணித்தமையினாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
|  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  | 

                                            
                                                                                                                                    
    
    
    
    
    
    
    
    
    
    ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
    
    Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan