யாழில் அரச பேருந்து விபத்து..! பொலிஸார் தீவிர விசாரணை
யாழ்ப்பாணத்தில் தனியார் பேருந்தை முந்திச் செல்ல முயன்ற அரச பேருந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த சம்பவம் இன்று (13.04.2026) காலை 9.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
அரச பேருந்து விபத்து
காரைநகரில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார் பேருந்தும், அரச பேருந்தும் ஒன்றை ஒன்று முந்திச் செல்ல முயன்றபோது, மானிப்பாய் அந்தோனியார் கோவிலுக்கு முன்பாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

தனியார் பேருந்தை முந்திச் செல்ல முயன்ற அரச பேருந்து, எதிரே வந்த மகிழுந்துக்கு இடம் வழங்க முயன்ற வேளையில் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும், குறித்த இடம் வாகனங்களை முந்திச் செல்ல உகந்த பகுதி அல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல் - தீபன்
லண்டனில் 36வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த இந்திய குடும்பம்., சம்பவம் குறித்து வெளியான தகவல் News Lankasri
ப்ளாக்பஸ்டர் வெற்றியடைந்துள்ள கருப்பு திரைப்படம்.. இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா Cineulagam