அரசாங்கத்திற்கு எதிராக தீவிரமடையும் போராட்டங்கள் - காலிமுகத்திடல் இருந்து அகற்றப்படும் மின் விளக்குகள்!
அரசாங்கத்துக்கு எதிராக நாளை காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் காலிமுகத்திடலில் பொருத்தப்பட்டுள்ள மின் விளக்குகள் அகற்றப்பட்டு வருவதாக நாடாளுமன்றில் இன்று முறையிடப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இந்த விடயத்தை, அமைச்சர் சரத் வீரசேகரவின் கவனத்துக்கு கொண்டு வந்தார்
காலிமுகத்திடலின் மின்விளக்குகளை கடற்படையினர் அகற்றி வருவதாக அவர் குறிப்பிட்டபோது சபைக்கு தலைமை தாங்கிய உறுப்பினர் அது ஒழுங்குப்பிரச்சினை இல்லை என்று கூறி முஜிபுர் ரஹ்மானின் உரையை இடைநிறுத்தினார்
இதேவேளை சமூக ஊடகங்களின் ஊடாக நாளைய போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருவதால் முக்கியமான இணையத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சன ராஜகருண தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா கனடாவின் கூட்டாளர் அல்ல... ரஷ்யாவைவிட மிகப்பெரிய அச்சுறுத்தல்: ஆய்வு முடிவுகள் News Lankasri
கடைசி போட்டியில் இமாலய வெற்றி! மீண்டும் உலகக்கிண்ணத்திற்கு தயாராக வருவோம் - ரஷித் கான் News Lankasri