அரச வங்கிகளில் ஏற்படவுள்ள மாற்றம்
அரசுக்கு சொந்தமான வங்கி நிறுவனங்கள் தொடர்பாக முன்மொழியப்பட்ட சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
சீர்திருத்த முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவதற்காக, நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியினால்(President) இந்த பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது.
சீர்திருத்தங்கள்
கடந்த கால பொருளாதார நெருக்கடியின் போது, அரசுக்கு சொந்தமான வங்கி(Government's Bank) நிறுவனங்களின் ஒட்டுமொத்த கட்டுப்பாடு, இடர் மேலாண்மை மற்றும் மேற்பார்வை ஆகிய துறைகளில் நிலவும் பலவீனங்களால் வங்கிகள் கடும் சிரமங்களை சந்தித்ததாக அரசு தெரிவித்துள்ளது.
அந்த வங்கிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பல சீர்திருத்தங்களை சர்வதேச நாணய நிதியம்(IMF), உலக வங்கி(World Bank) மற்றும் இலங்கை மத்திய வங்கி(Central Bank of Ceylon) ஆகியவற்றின் உறுப்பினர்களைக் கொண்ட நிபுணர் குழு கண்டறிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தினால் வழங்கப்படும் விரிவான நிதி வசதிகள் திட்டத்திலும், உலக வங்கியினால் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்திக் கொள்கை நடவடிக்கைகளின் கீழ் அடிப்படை நடவடிக்கைகளிலும் உள்ளடங்கிய கட்டமைப்புத் தேவையாக மேற்படி சீர்திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.