இந்திய கடற்றொழிலாளர்களை கைது செய்வதில் அரசாங்கத்தின் ஆர்வம்
கடந்த கால அரசாங்கத்தை விட தற்போதைய அரசாங்கம் இந்திய கடற்றொழிலாளர்களை கைது செய்வதில் ஆர்வம் காட்டுவதாக வடக்கு மாகாண கடற்றொழிலாளர் சங்கங்களின் இணையத் தலைவர் மொஹமட் ஆலம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் (23.10.2025) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேறகண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
“வடக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கடற்றொழிலில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை செய்ய வேண்டி இருக்கின்றது.
கடற்றொழிலாளர்களின் நலன்கள்
இந்த அரசாங்கத்தை கொண்டு வந்ததில் கடற்றொழில் சமூகமாகிய எங்களுக்கும் ஒரு பங்கு உண்டு. ஆகவே கடற்றொழிலாளர்களின் நலன்களில் பாதிப்பு ஏற்படாத வகையில் இந்த அரசாங்கம் செயற்பட வேண்டும்.
பல்வேறு பகுதிகளில் இழுவை படகுகளில் கடற்றொழில் நடைபெறுகின்றது. அவை கட்டுப்படுத்தப்பட வேண்டும். இந்த கடல் எங்களுக்குரியது. கச்சதீவும் எங்களுக்குரியது” எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



