தோல்வியில் முடிந்த கலந்துரையாடல்!
அரசாங்கத்திற்கும் தொழிற்சங்க கூட்டமைப்புக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல் தோல்வியடைந்ததாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இந்தக் கலந்துரையாடல் நேற்றைய தினம் (14.03.2023) நடைபெற்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவ கலாநிதி ஹரித அலுத்கே, இந்த சந்திப்பின்போது தொழில் வல்லுநர்கள் தங்கள் தொடரும் தொழிற்சங்க நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான உறுதியான தீர்வுகள் அரசாங்கத்தால் முன்வைக்கப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
தொழிற்சங்க கூட்டமைப்பு
இந்தநிலையில், நேற்றைய கூட்டத்தின் பகுப்பாய்வு அறிக்கை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் இன்று 14ஆம் திகதி தீர்வொன்று வழங்கப்படும் எனக் கலந்துரையாடலில் இணைந்த அதிகாரிகள் தொழிற்சங்க கூட்டமைப்புக்கு உறுதியளித்துள்ளனர்.
ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் ஜனாதிபதியின் செயலாளர், நிதி
அமைச்சின் செயலாளர், ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் மற்றும் நிதி
அமைச்சின் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

மிகவும் ஆபத்தானவர், நெருங்க வேண்டாம்: தீவிரமாக தேடப்படும் தமிழர் தொடர்பில் லண்டன் பொலிசார் எச்சரிக்கை News Lankasri
