புத்தாண்டுக்கு அரசு வழங்கும் கொடுப்பனவு
தமிழ்- சிங்கள புத்தாண்டை முன்னிட்டு குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை இரண்டு மாத்ஙகளுக்கு வழங்க நேற்று கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டில் அத்தியவசிய பொருட்களின் விலைகள் கடுமையாக அதிகரித்துள்ளன. இதன் காரணமாக விளிம்பு நிலையில் வாழும் மக்கள் பெரும் பொருளாதார நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர்.
மேலும் அத்தியவசிய பொருட்களான எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு போன்றவற்றுக்கும் தட்டுப்பாடு நிலவுவதால், அனைத்து தரப்பு மக்களுக்கும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.