இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களுக்கான வரி அதிகரிப்பு
இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களுக்கு விதிக்கப்படும் வரியை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இந்த வர்த்தகப் பொருட்களுக்கு வரி விதிக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
இந்த புதிய விசேட வர்த்தக பண்ட வரி ஒக்டோபர் மாதம் 14ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 31 திகதி வரை நடைமுறைக்கு வரும்.
விசேட வர்த்தக பண்ட வரி
இதன்படி, ஒரு கிலோகிராம் மைசூர் பருப்புக்கு 25 சதமும், மஞ்சள் பருப்புக்கு 25 சதமும் வரி விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒரு கிலோ கிராம் மாசி மற்றும் அதற்குப் பதிலான பொருட்களுக்காக 302 ரூபா விசேட வர்த்தக பண்ட வரி விதிக்கப்பட்டுள்ளது.
எலும்பு நீக்கப்பட்ட மீன் மற்றும் பிற மீனின் இறைச்சியைத் தவிர, புதிய அல்லது உறைந்த மீன்கள் ஒரு கிலோவிற்கு 10% அல்லது 400 ரூபாய் என்ற உச்சபட்ச வரிக்கு உட்பட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
