அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகருடன் வடக்கு மாகாண ஆளுநர் விசேட சந்திப்பு
வடக்கு மாகாண ஆளுநருடன் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகருக்குமிடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இச்சந்திப்பானது, இன்றைய தினம் (27.03.2024) ஆளுநரின் யாழ்ப்பாணத்திலுள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றுள்ளது.
இதன்போது, அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் ஊடாக வடக்கில் முன்னெடுக்கப்பட்ட மற்றும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் செயற்பாடுகள் தொடர்பில் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் ஆளுநருக்கு தெளிவுப்படுத்தினார்.
புலம்பெயர் உறவுகளின் முதலீடு
அத்துடன், வடக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமைகள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டார்.
மேலும், வடக்கு மாகாணத்தில் காணப்படும் வளங்களை அடையாளப்படுத்தி புலம்பெயர் உறவுகள் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும் என ஆளுநர் தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பில் அவுஸ்திரேலிய வாழ் இலங்கை புலம்பெயர் உறவுகளுக்கு தெளிவுபடுத்துமாறும் உயர்ஸ்தானிகரிடம் ஆளுநர் கேட்டுக்கொண்டார்.
மேலும், வடக்கு மாகாணத்தில் தொழிற்றுறையை மேம்படுத்துவதனூடாக வேலையின்மை பிரச்சினை தீர்க்கப்படுவதுடன், பொருளாதார நிலையிலும் முன்னேற்றத்தை காண முடியும் என ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |










பிரான்ஸ் அழகியை திருமணம் செய்வதற்காக 700 கிலோமீற்றர் பயணித்த நபர்: காத்திருந்த ஏமாற்றம் News Lankasri

அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க ஓவர் நைட்டில் கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan
