அரசுக்கு எதிரான 2 ஆம் அலை சுனாமியை போல் இருக்கும்!- அநுரகுமார எம்.பி. எச்சரிக்கை
"அரசை விரட்டுவதற்கான இரண்டாவது அலை விரைவில் ஆரம்பமாகும். அந்த அலை சாதாரண அலையாக அல்லாமல், சுனாமி போல் இருக்கும். இலக்கை அடையாமல் ஓயமாட்டோம் என ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க எம்.பி. தெரிவித்தார்.
அரசை விரட்டியடிக்க வீதியில் இறங்குவோம்
'இந்த அரசை விரட்டியடிக்க வீதியில் இறங்குவோம்' என்ற தொனிப்பொருளின் கீழ் அம்பலாந்தோட்டையில் நேற்று நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

"அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் இன்று வரிசைகளில் நிற்கின்றனர். எனவே, கட்சி பேதம் வேண்டாம். நாட்டை மீட்க மக்கள் சக்தியாக ஒன்றிணைவோம்.
மக்கள் "ஆம்" சொன்னால் அரசை விரட்டுவதற்கான ஆட்டத்தை ஆரம்பிக்க நாம் தயார். இரண்டாவது அலை ஆரம்பமாகும். திகதி, விவரம் அறிவிக்கப்படும். அந்த அலை சுனாமி போல் அமையும். மக்களுக்கு நெருக்கடி வரும்போது பொலிஸாரும், இராணுவத்தினரும் மக்கள் பக்கம்தான் நிற்பார்கள் என்றார்.

சிறுபிள்ளைகளையும் விட்டுவைக்காத பிரித்தானிய அரசு: அறிமுகமாகும் புதிய புலம்பெயர்தல் விதி News Lankasri
தலையில் துண்டு.. தலைமறைவான குணசேகரன்! சொத்து பற்றிய உண்மையை போட்டுடைத்த ஜனனி! எதிர்நீச்சல் 2 ப்ரோமோ Cineulagam