கோவிட் நிலைமைகளை கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் வெற்றியடைந்துள்ளது
கோவிட் நிலைமைகளை கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் வெற்றி அடைந்துள்ளது என அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து எதிர்க்கட்சிகள் சந்தேகம் வெளியிட்ட போதிலும் கோவிட் கட்டுப்பாட்டில் எதிர்பார்ப்புக்களை கடந்து வெற்றியடைந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் 75 வீதமானவர்களுக்கு அரசாங்கம் தடுப்பூசி ஏற்றியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். தெரிவு செய்யப்பட்ட குழுவினருக்கு பூஸ்டர் தடுப்பூசிகளும் ஏற்றப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
சில வாரங்களுக்கு முன்னதாக தாமும் கோவிட் தொற்றுக்கு இலக்கானதாகவும், சிகிச்சையின் பின்னர் பூரண குணமடைந்துள்ளதாகவும் நாட்டில் காணப்படும் சுகாதார வசதிகள் தரமானவை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சியினரும், பொதுமக்களும் தங்களது கருத்துக்களை வெளியிட அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
கோவிட் நிலைமைகளிலும் போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் நாடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 21 மணி நேரம் முன்

Brain Teaser Maths: கணக்கு புலிகளுக்கே சவால் விட்ட புதிர்... உங்களால் தீர்க்க முடியுமா பாருங்கள்? Manithan

அமெரிக்க - சீனா வர்த்தக ஒப்பந்தம்... முகேஷ் அம்பானியை விட மூன்று மடங்கு சம்பாதித்த நபர் News Lankasri
