வாகன இறக்குமதி தொடர்பில் நிறுவனங்களுக்கு அரசாங்கம் வழங்கியுள்ள பதில்
இலங்கைக்கு வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான சந்தர்ப்பம் விரைவில் கிடைக்கும் என விளம்பரங்களை வெளியிடும் முகவர் நிலையங்களுக்கு, அரசாங்கப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ பதிலளித்துள்ளார்.
அனைத்து வகையான வாகனங்களையும் இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்குவது தொடர்பில் இதுவரையில் எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று அவர் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றின் போது தெரிவித்துள்ளார்.
கட்டுப்பாடுகள்
எனினும், சில கட்டுப்பாடுகளுடன் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது என்று அரசாங்கப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, எந்தவொரு வாகனத்தையும் இறக்குமதி செய்வதற்கு அனுமதியளிப்பதாக விளம்பரங்களை வெளியிட்டு மக்களை குழப்ப வேண்டாம் என அமைச்சர் ஜயதிஸ்ஸ நிறுவனங்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வாகன இறக்குமதியில் முடிவெடுக்கும் போது, நாட்டின் டொலர் இருப்பு மற்றும் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு முடிவு எடுக்கப்படுகிறது.
இந்தநிலையில் பொருளாதாரத்தில் அழுத்தத்தை ஏற்படுத்தும் எந்த முடிவையும் எடுக்க அரசாங்கம் தயாராக இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |