செயலிழந்து காணப்படும் அரசாங்க தொலைபேசி சேவைகள்
பல அரசாங்க தொலைபேசி சேவைகள் செயல்படாத நிலையில் இருப்பதாக விசாரணை ஒன்றில் தெரியவந்துள்ளது.
அறுபத்தைந்துக்கும் மேற்பட்ட 4-இலக்க தொலைபேசி எண்கள் மற்றும் மற்றும் சில ஐந்து இலக்க தொலைபேசி சேவைகளை அழைக்கும்போது அவற்றில் பதில் இல்லாத காரணத்தாலும், இணைப்பு இல்லாததாலும், சில சேவைகள் 10 நிமிடங்களுக்கு மேல் காத்திருக்கும் நேரமும் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, 65 தொலைபேசி சேவைகளில் 40 சதவீதம் பதிலளிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
ஆய்வுக்குட்படுத்தப்பட்ட எழுபது எண்களில், 11 தொலைபேசி எண்கள் இணைக்கப்படவில்லை என்றும் 6 முகவர்கள் பதிலளிக்க முடியாது என்று அழைப்பாளருக்குத் தானாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது.
செலுத்தப்படாத கட்டணம்
மேலும் சில சேவைகள் 3 முயற்சிகளின் போது மற்றொரு சேவையில் இருப்பதாகவும் 10 நிமிடங்களுக்கு மேல் காத்திருக்கும் நேரம் இருந்ததாகவும் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கைதொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் (TRCSL) அதிகாரிகள், ஒவ்வொரு வருடமும் 3 மற்றும் 4 இலக்க சுருக்கக் குறியீடுகளுக்கான சேவைகளை கண்காணிப்பதாகவும், அவை குறைவாகப் பயன்படுத்தப்பட்டால், சம்பந்தப்பட்ட அமைப்பிடம் நியாயப்படுத்துமாறு கோருவதாகவும் தெரிவித்தனர்.
"சில தொலைபேசி எண்கள் கட்டணம் செலுத்தவில்லை என்றாலும் அவை தொழிற்படாமல் போகலாம்" என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOINNOW |