பெண் பொலிஸ் அதிகாரியின் தாய்மை - இலங்கை முழுவதும் குவியும் வாழ்த்துக்கள்
முல்லைத்தீவில் தந்தையால் கொடூரமாக தாக்கப்பட்ட பெண் பிள்ளையை பராமரிக்கும் பொலிஸ் அதிகாரி தொடர்பில் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகின்றன.
வெலிஓயா, கல்யாணபுர பிரதேசத்தில் குழந்தையை கொடூரமான முறையில் தந்தை தாக்கியது தொடர்பில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தந்தையுடன் தாக்குதலுக்கு துணை புரிந்த இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெண் பொலிஸ்
இந்நிலையில் தாக்குதலுக்கு உள்ளான சிறுமி பொலிஸாரின் பாராமரிப்பில் எடுக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறார்.
வெலிஓயா பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தில் 04 வயது 06 மாத வயதுடைய சிறுமி உத்தியோகத்தர்களின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், வெலிஓயா பொலிஸ் அதிகாரிகளின் மேற்பார்வையில் முல்லைத்தீவு பொது வைத்தியசாலைக்கு சிறுமி கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
தந்தையால் தாக்குதல்
தந்தையால் கொடூரமாக தாக்கப்பட்டு பல அழுத்தங்களுக்கு முகங்கொடுத்த சிறுமியை, பெண் பொலிஸ் அதிகாரி ஒருவர் மிகவும் பாசமாகவும் அன்பாகவும் கவனித்துக் கொள்ளும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படுகின்றன.
பொலிஸ் சீருடை அணிந்த பெண்ணுக்குள் மலர்ந்த தாய்மை என பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அத்துடன், குழந்தையின் பெற்றோரை விட பல மடங்கு அன்பாக கவனித்துக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

சீனா, துருக்கியை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஐரோப்பிய நாடு - இந்தியாவின் திட்டம் என்ன? News Lankasri

பேரக்குழந்தைகளுக்கு தோழியாகவே மாறிவிடும் பாட்டிகள் இந்த ராசியினர் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

J-35A போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு அதிவேகமாக அனுப்பும் சீனா., பாதி விலைக்கு ஒப்பந்தம் News Lankasri

தினமும் 300 ரூபாய்க்கு கூலி வேலை செய்து கொண்டே நீட் தேர்வில் தேர்ச்சி.., மதிப்பெண் எவ்வளவு தெரியுமா? News Lankasri
