நாட்டை முடக்கும் தீர்மானம் அரசாங்கத்திற்கு இல்லை! - முஜிபுர் ரஹ்மான்
கோவிட் நோயை கட்டுப்படுத்த, நாட்டை தற்காலிகமாகவேனும் முடக்குமாறு விஷேட மருத்துவ சங்கத்தினரும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கமும் அரசாங்கத்தை கேட்டுக் கொண்டாலும், அரசாங்கத்திற்கு அத்தகைய கொள்கை இல்லை என்பது மிகவும் தெளிவாக தெரிவதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இதனை இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் தெரிவித்துள்ளார். ஆரம்பத்தில் இருந்தே அரசாங்ம் கோவிட் பரவல் கட்டுப்படுத்தல் நடவடிக்கைகளை விட அரசியல் நடவடிக்கைகளுக்கே முன்னுரிமை அளித்தது.
இப்போது பல நகரங்களில் உள்ள தொழிற்சங்கங்கள் சுய முடக்கலுக்கு செல்ல முடிவு செய்துள்ளன. வர்த்தகர்கள் தங்கள் வியாபாரத் தளங்களை தாங்களாகவே மூடிவிட தீர்மானித்துள்ளனர்.
இது அரசாங்கம் கூறுவதை மக்கள் செவிமடுப்பதில்லை என்பதையே இதன் மூலம் புலப்படுகிறது என்று முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். இன்று 150 க்கும் மேற்பட்ட மக்கள் நாளாந்தம் இறந்து கொண்டிருக்கிறார்கள், கிட்டத்தட்ட 3,000 நோயாளிகள் கண்டுபிடிக்கப்படுகிறார்கள்.
அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்கள் இது குறித்து கவனயீனமாக அசிரத்தையாக இருக்கின்றனர். அமைச்சரவை அமைச்சர்களுக்கும் நாட்டின் நிலை தெரியாது குழந்தைகளைப் போலவே நடந்துகொள்கின்றனர்.
இது மிகவும் ஆபத்தான சூழ்நிலை. நாட்டில் இதுபோன்ற ஒரு பேரழிவு சூழ்நிலையில், மக்கள் தங்கள் அன்றாட நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்ற தன்னார்வமாக முன்வந்துள்ளனர். இதைக் கூட புரிந்து கொள்ளும் ஆற்றல் ஆளும் தரப்பு அமைச்சர்களுக்கு இல்லை.
இதுபோன்ற யுகத்தில் அரசாங்கம் சுகாதார அதிகாரிகளின் பேச்சைக் கேட்காமல் செயல்படுகிறது. இந்த நாட்டு மக்கள் புரிந்துகொண்டு சுயமாக முடக்கத்திற்கு வர முயற்சிக்கும்போது, அரசாங்கத்தின் ஒரு அமைச்சர் வந்து கடைகளை மூடுவது ஒரு சதி என்று கூறுகிறார்.
அரசாங்கத்தில் உள்ள அமைச்சரவை அமைச்சர்களுக்கு கூட இது புரியவில்லை என்று தோன்றுகிறது, எனவே அமைச்சரவை அமைச்சர்களுக்கு கூட இது புரியவில்லை என்றால் அரசாங்கம் எப்படி கோவிட்டை நிர்வகிக்க முடியும்?
இன்றைய ஆட்சியாளர்களுக்கு பாலம் நிர்மானிப்பதும், அதிவேக வீதி நிர்மானிப்பதும், நகரங்களை அழகுபடுத்தும் திட்டங்கள் தான் முன்னுரிமையாகவுள்ளது.
அதனால் தான் நாடு இன்று மிகவும் தீவிரமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்றும் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 7 மணி நேரம் முன்

பிடிவாதத்தின் மறு உருவமாகவே உலாவும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

டூரிஸ்ட் பேமிலி படத்தின் மாபெரும் வெற்றி.. இயக்குநருடன் பணிபுரிய ஆர்வம் காட்டும் முன்னணி நடிகர்கள் Cineulagam
